Author: சக்தி ஆன்லைன் டீம்

  • navarathikri-poojai-muriagal

    மூன்று மாபெரும் சக்திகளான அன்னை துர்க்கை, அன்னை லெட்சுமி, அன்னை சரஸ்வதியினை போற்றி 9 நாட்கள் கொண்டாடும் விழா தான் நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் மாலை அம்மாவாசையில் ஆரம்பித்து 10-வது நாளான விஜயதசமி வரை இந்த விழா நடைபெறும்.

    முதல் மூன்று நாட்களில் அம்பிகையை துர்க்கை ரூபமாகவும் இரண்டாவது மூன்று நாட்கள் அம்பிகையை லெட்சுமியாகவும், மூன்றாவது மூன்று நாட்கள் அம்பிகையை சரஸ்வதியாகவும் வழிபடுவது தொன்று தொட்டு வரும் பழக்கம். இக்காலகட்டத்தில் காலை, மாலை இருவேளையும் அம்பிகை வழிபாடு நடைபெறும்.

    கொலு வைக்கும் பழக்கம் உடையவர்கள் ஒற்றை படை கணக்கில் 3,5,7,9 போன்ற எண்களில் படிக்கட்டுகள் அமைத்தும் கலசம் வைத்தும் கொலு பொம்மைகளை வைத்தும் வழிபடுவர். அழகான கோலங்கள், தோரணங்கள், பூ அலங்காரம் இவையால் அம்பிகை இருக்கும் பூஜை அறையினை அவரவர் வசதிக்கேற்ப பக்தியோடு அலங்கரிப்பர்.

    அந்தந்த நாட்களில் வழிபட்டு அம்பிகைக்கு ஏற்ற சகஸ்ர நாமம், அஷ்டோத்திரம், மஹிஷாசுர மார்த்திரி ஸ்லோகம், தேவி பாகவதம் படித்தல் போன்றவற்றினை செய்ய வேண்டும்.

  • thirupathiyil-september-swamy-dhrshan

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 23.38 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.87.84 கோடி வருமானம் உண்டியல் காணிக்கை மூலம் வந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

    இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கையைவிட ரூ.11.56 கோடி அதிகம் எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.76.28 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    லட்டு பிரசாதம் 97.87 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 63.49 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 9.82 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். தங்கும் விடுதிகள் வாடகை மூலம் ரூ.5.93 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.

  • navarathiri-patriya-ariya-thagavalagal

    சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

    தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.

    நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.

    நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.

    நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

    நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

    விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

    நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

    ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

    நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

    பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

  • tv-malai-navarathiri-vizha

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு அக்டோபர் 10-ஆம் தேதி முதல் அக்.19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    வரும் 10-ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    நிறைவாக 19-ம் தேதி விஜயதசமி அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெறுகிறது.

  • thirupathy-arjitha-seva-ticket

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.

    தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு தனது இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜனவரி மாதத்திற்கான 68,575 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

    இவற்றை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு, ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

    கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் செல்லிடப்பேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் கிடைத்த பக்தர்கள் 3 நாள்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு வழங்கிறது.

    நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ஆன்லைன் மூலமாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெற பக்தர்களுக்காக புதிய திட்டத்தை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரு செல் போன் நம்பர் மூலமாக இரண்டு சேவை டிக்கெட்டுகள் மட்டுமே பெற முடியும். ஆதார் கார்டு பார்கோடிங் மூலமாக டிக்கெட்டுகளை சோதனை செய்யும் முறையை கொண்டுவரப்பட்டுள்ளது.

  • indraya-naal-maha-pradhosham

    அக்டோபர் 6
    விளம்பி வருடம் – புரட்டாசி 20
    பிரதோஷம் பிரதோஷம்
    மகா பிரதோஷம்
    06-அக்-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி ம 3.15
    நட்சத்திரம் : மகம் மா 4.38
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – பெருமை
    கடனம் – பாராட்டு
    சிம்மம் – இன்பம்
    கன்னி – பக்தி
    துலாம் – லாபம்
    விருச்சிகம் – ஆக்கம்
    தனுசு – உற்சாகம்
    மகரம் – ஜெயம்
    கும்பம் – ஏமாற்றம்
    மீனம் – போட்டி

  • vallalar-vazhangiya-arivuraigal

    நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.

    தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

    மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

    ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.

    பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

    பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.

    இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.

    குருவை வணங்கக் கூசி நிற்காதே.

    வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

    தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

    இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடபட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடபட்டன.

  • pasiyai-pokidum-vazhi-vagutha-vallar

    வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

    இவர் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தார். பெற்றோர் ராமையாபிள்ளை- சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் பிறந்தனர். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்.

    பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

    இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.

  • indraya-naal-eppadi

    இன்றைய நாள் எப்படி

    அக்டோபர் 5
    விளம்பி வருடம் – புரட்டாசி 19
    ஏகாதசி
    05-அக்-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி மா 5.30
    நட்சத்திரம் : ஆயில்யம் மா 6.07
    யோகம் : மரண யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – இன்சொல்
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – புகழ்
    கடனம் – பக்தி
    சிம்மம் – ஓய்வு
    கன்னி – முயற்சி
    துலாம் – சிந்தனை
    விருச்சிகம் – ஊக்கம்
    தனுசு – பாசம்
    மகரம் – ஆக்கம்
    கும்பம் – தனம்
    மீனம் – குழப்பம்

  • maha-vishnuvuku-ugandha-thulasi

    புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுக்கு உகந்த மாதம். இந்த மதத்தில் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பல்வேறு பலன்களை பெறலாம்.

    துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் போதும் அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசி முக்கியத்துவம் பெறுகிறது.

    பெருமாளுக்கு மிகவும் பிடித்தது துளசி ஆகும். எனவேதான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி இலைகளையும், துளசி தீர்த்தத்தையும் கொடுக்கிறார்கள்.

    பெருமாளுக்கு பூஜை நடத்தப்படும் போது துளசி இலையால் அர்ச்சனை செய்யப்படும். அர்ச்சகர் போடும் துளசி இலை பெருமாளின் திருவடியில் விழும். அந்த இலையை நாம் பிரசாதமாக வெறும்போது, பெருமாலின் அனுக்கிரகம் நமக்கு கிடைப்பதாக ஐதீகம்.

    பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதை வைத்து, அதில் துலசி இலை கலந்து துலசி தீர்த்தம் தயாரிக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் புண்ணிய நதி அல்லது அந்தந்த கோவில் தீர்த்தங்களையும் கலந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்.

    துளசி தீர்த்தத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் சேர்க்கப்படுவதுண்டு. செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது.

    வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது.

    ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.