Author: சக்தி ஆன்லைன் டீம்

  • pushkaram-vizhavni-kadhai

    புஷ்கரம் என்பது பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம். உலக மக்கள் நீராடிப் புண்ணியம் பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான். அதற்காக பிரம்மதேவரை வேண்டி தவம் இருந்தார். குருபகவானின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், அவருக்கு முன்பு தோன்றி, ”என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். குருபகவானும் ‘பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வேண்டும்’ என்றார்.

    புஷ்கர தீர்த்தத்தை குருபகவானுக்குத் தருவதில் பிரம்மதேவருக்கு சம்மதம்தான். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரை விட்டுப் பிரிய சம்மதிக்கவில்லை. அதேநேரம் குருபகவானுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத பிரம்மதேவர், புஷ்கரத்துக்கும் குருபகவானுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை செய்துவைத்தார். அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் குறிப்பிட்ட காலம் புஷ்கரம் சேர்ந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடினால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்றும் முடிவானது.

    இதுதான் புஷ்கர விழாவின் தாத்பர்யம் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டு நதிகளில் புஷ்கர விழா நடைபெறுகிறது. கடந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருக்கும்போது காவிரியில், நடைபெற்றது போலவே, இந்த ஆண்டு அவர் விருச்சிக ராசிக்குச் செல்லும்போது விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணியில் புஷ்கர விழா நடைபெற இருக்கிறது.

  • navarthiri-bramorsavam-sri-ramar-alangaram

    திருப்பதியில் நவராத்தி பிரம்மோற்சவத்தில் ஸ்ரீராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதியில் கடந்த 10-ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு கருட சேவை நடைபெற்றது. இதில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை தரிசிக்க 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.

    விழாவின் ஆறாம் நாளில் அனுமன் வாகனத்தில் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் திரண்டுஇ ஆடல் பாடலுடன் ஏழுமலையானை வரவேற்றனர்.

  • navarthiri-bramorsavam-sri-ramar-alangaram

    திருப்பதியில் நவராத்தி பிரம்மோற்சவத்தில் ஸ்ரீராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதியில் கடந்த 10-ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு கருட சேவை நடைபெற்றது. இதில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை தரிசிக்க 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.

    விழாவின் ஆறாம் நாளில் அனுமன் வாகனத்தில் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் திரண்டுஇ ஆடல் பாடலுடன் ஏழுமலையானை வரவேற்றனர்.

  • navarathiri-7th-day-celebration

    நவராத்திரி விரதத்தில் ஏழாம் நாள் வழிபாடு மிகவும் முக்கியம் வாய்ந்தது. நவராத்தியின் ஒன்பது நாட்களும், சக்தியை, துர்கா, பத்ரக்காளி, ஜகதாம்பாள், அன்னபூரணி, சர்வமங்களா, பைரவி, ஜாந்தி, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என அலங்கரித்து வழிபடுறோம்.

    சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். அந்தவகையில், நவராத்திரியின் ஆறாவது நாளில் நாம் அம்பிகையை வழிபட்டு இருப்போம். ஏழாம் நாளில் ஏழு வயதுள்ள பெண் குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை ‘காளிகா’ தேவியாக வழிபட வேண்டும். பேரி வாசிக்கத் தெரிந்தவர்கள் நீலாம்பரி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது.

    நவராத்திரியின் ஏழாவது நாளில் தேங்காய் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தைக் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும். இன்று அம்பிகையை தும்பை பூவால் அர்ச்சனை செய்வது மேலும் சிறப்பான பலனை அருளும்.

  • indru-ungal-rasikku-ennapalan

    அக்டோபர் 15
    விளம்பி வருடம் – புரட்டாசி 29
    15-அக்-2018 திங்கள்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சஷ்டி கா 10.10
    நட்சத்திரம் : மூலம் மா 6.09
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சிக்கல்
    ரிஷபம் – உதவி
    மிதுனம் – நன்மை
    கடனம் – சிரமம்
    சிம்மம் – நிம்மதி
    கன்னி – லாபம்
    துலாம் – சுகம்
    விருச்சிகம் – மேன்மை
    தனுசு – வெற்றி
    மகரம் – நற்செயல்
    கும்பம் – ஆக்கம்
    மீனம் – அன்பு

  • vinayakaruku-ugandha-21-ilaigal

    விநாயகருக்கு உகந்த 21 இலைகளும், அதன் பலன்களும்..

    1. முல்லை இலை – அறம் வளரும்

    2. கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

    3. வில்வம் இலை – இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

    4. அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது

    5. இலந்தை இலை – கல்வியில் மேன்மையை அடையலாம்.

    6. ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப்பெறும்.

    7. வன்னி இலை – பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

    8. நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.

    9. கண்டங்கத்தரி – வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

    10. அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

    11. எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிட்டும்.

    12. மருதம் இலை – மகப்பேறு கிட்டும்.

    13. விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணிவு கைவரப்பெறும்.

    14. மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

    15. தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

    16. மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

    17. அரசம் இலை – உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

    18. ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

    19. தாழம் இலை – செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

    20. அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

    21. தவனம் பூவின் இலை -: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்

  • navarathiri-poda-vendiya-muthalithi-kolam

    முத்தாலத்தி கோலம் என்பது ஜெவ்வரிசிகளை கொண்டு கோலம் போடுவது .

    நவராத்திரியின் போது, ஒவ்வொரு நாளுக்கான நவக்ரக கோலங்களை தட்டில் அல்லது ஏதோ ஒரு base சில் போட்டு , அதன் மீது ஜெவ்வரிசிகளை ஒட்டி விடலாம் .

    plain white based அட்டைகளை எடுத்து , அதில் இந்த நவக்ரக கோலங்களை தனித்தனியாக வரைந்து , அதில் கடையில் விற்கும் சிறிய மணிகளைக் கொண்டு (colourful beads) ஒட்டி விடலாம்.

    இதை பத்திரமாக வைத்திருந்து , ஒவ்வொரு நவராத்திரிக்கும் கொலுவின் முன் அன்றன்று வைத்துவிடுவேன் .

    நவராத்திரி நாட்களில் முத்தாலத்தி வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

  • jeeva-samadhi-adaivadharku

    அவை “திருமந்திரம்” நூலில் விரிவாகப் பேசப்படுகிறது. திருமந்திரம் 7ஆம் தந்திரத்தில் ‘சமாதி கிரியை’ எனும் தலைப்பில் பல பாடல்கள் உண்டு.

    அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
    வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
    நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
    வந்து நாய் நரிக்குண வாகும் வையகமே.

    மகா ஞானி அல்லது பிரம்ம வித்தை பயிலும்
    ஒருவனின் உடல் மற்றவர்களைப் போல மாண்டுபோன பின் தீயிலிட்டு எரித்தோமானால், நாட்டு மக்கள் எல்லாம் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர். அவ்வுடல் கவனிக்க ஆளில்லாமல் அழுகிக் கிடந்து நாய்களும், நரிகளும் அவர் உடலைக் கடித்து உண்ணுமானால் உலகில் பகை மூண்டு நாட்டு மக்கள் நாய் நரிகளுக்கு உணவாகிவிடுவர்.

    எண்ணிலா ஞானி உடல் எரி தாவிடின்
    அண்ணல் தன் கோயில் அழலிட்டதாம் ஒக்கும்
    மண்ணில் மழை விழா, வையகம் பஞ்சமாம்
    எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.

    ஞானி ஒருவரின் உடலைத் தீயிலிட்டு எரித்தால், சிவபெருமான் கோயில் கொண்டருளும் ஆலயத்தைத் தீயிட்டழித்தற்கு ஒக்கும். அப்படிப்பட்ட நாட்டில் மழை பெய்யாது. பஞ்சம் தோன்றும், எண்ணற்கரி மன்னர்கள் முடி துறப்பர்.

    புண்ணியமாம் அவர் தம்மைப் புதைப்பது
    நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
    மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
    மண்ணுல கெல்லாம் மயங்கும் அனல் மண்டியே.

    ஞானியின் உடலைப் புதைப்பது புண்ணிய காரியம். மாறாக அவரது உடலை தீயில் சுட்டு எரித்தால் நாட்டில் அழிவுகள் நேரும். அப்படி உடலைப் புதைக்காமல் மண்ணில் சிதைந்து போகுமாறு விட்டுவிட்டால் உலகத்தின் அழகு கெடும். உலகம் எங்கும் தீப்பிடித்து கெடும்.

    அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
    அந்த உடல்தான் குகை செய் திருத்திடில்
    சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
    அந்தமில் இன்ப அருள் பெறுவாரே.

    ஞானி ஒருவர் இறையருள் பெற்று பின்னர் உடலைவிட நினைத்தால், அந்த உடம்பை குகை ஒன்றை நிறுவி, அதில் அவரை இருத்திடல் வேண்டும். அப்படி செய்தோமானால் அரசர்களும் குடிமக்களும் அளவற்ற இன்பத்தை அடைவார்கள். இறைவன் அருள் அவர்களுக்குக் கிட்டும்.

    நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
    குவைமிகு சூழ வைஞ் சாணாகக் கோட்டித்து
    அவமிகு குகை முக்கோணமுச் சாணாக்கிப்
    பவமறு நற்குகை பத்மாசனமே.

    குகை என்பது தரையில் தோண்டப்படும் குழி. அது எப்படி இருக்க வேண்டும்? ஒன்பது சாண் அளவுக்குக் குறையாமல் ஆழம் இருக்க வேண்டும். அப்படி தோண்டும் மண்ணைக் குழியைச் சுற்றி ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்டி, அந்தக் குழியை குகைபோன்ற குழியில் அவரது உடலை பத்மாசனமாக உட்கார வைத்திட வேண்டும். அந்த குகைபோன்ற குழி எங்கு அமைக்கப்பட வேண்டும்?

    தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
    நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
    உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
    இந்நிலந் தான் குகைக்கு எய்து மிடங்களே.

    ஞானியின் உடலை அடக்கம் செய்யும் இடங்கள் எங்கெல்லாம் அமைக்கலாம் தெரியுமா? சமாதி ஆனவன் வீட்டின் பக்கத்தில், நடமாடும் சாலையோரத்தில், குளக்கரையில், ஆற்றின் நடுவில், பூஞ்சோலையில், நகரத்தில் நல்ல சுத்தமான பூமியில், அழகான கானகம், உயர்ந்த மலைச் சாரல் ஆகிய இடங்களே உகந்த இடங்களாம். சமாதிக்கான குகை எனும் குழி அப்படி அமைக்கப்பட வேண்டும்?

    நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
    நிற்கின்ற பாத நவபாத நேர்விழப்
    பொற்பம ரோசமு மூன்றுக்கு மூன்றணி
    நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே.

    அமைக்கப்படுகின்ற குழி நான்கு புறமும் காலடியால் ஐந்து அடி அகலம், ஒன்பது அடி உயரம் இருத்தல் வேண்டும். ஞானியின் உடலை அந்தக் குழியில் சமாதி வைக்கும்போது அதில் இடப்பட வேண்டிய பொருட்கள் எவை?

    பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
    விஞ்சப் படுத்த தன் மேலாசனம் இட்டு
    முஞ்சிப் படுத்து வெண்ணீரிட்டு அதன் மேலே
    பொன்செய் நற் சுண்ணம் பொதியலுமாமே.

    பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகிய ஐந்து வகை உலோகங்களையும், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், பவழம், கோமேதகம், புஷ்பராகம், குருவிந்தம், முத்து ஆகிய நவமணிகளையும் பரப்பி வைத்து, அதன் மீது இருக்கை அமைத்து, தர்ப்பைப் புல் பரப்பி, விபூதியை நிறைய இட்டுவைக்க வேண்டும். அதன் மூது சுண்ணப் பொடியை இட்டு வைக்க வேண்டும். பிறகு?

    நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக்
    கள்ளவிழ் தாமம் களபம் கத்தூரியும்
    தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
    ஒள்ளிய தூபம் உவந்திடுவீரே.

    குழியின் அடியில் நடுவாக சதுரமாகச் செய்து அதன் மீது தேனொழுகும் மலர்கள், சந்தனம், கஸ்தூரி ஆகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் போன்றவற்றைச் சேர்த்துத் தெளிக்க வேண்டும். நல்ல பிரகாசமான தீப ஒளியைக் குழிக்குள் காட்ட வேண்டும்.

    ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
    மீதினில் இட்டு ஆசனத்தின் மேல் வைத்துப்
    போதறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
    மீதில் இருத்தி விரித்திடுவீரே.

    உடலெங்கும் திருநீற்றால் பூசி மேலாடை போர்த்தியதுபோல செய்து, உடலை இருக்கையில் அமர்த்தி, மலர், அருகம்புல், நறுமணப் பொடி, வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குழியில் வைத்து நான்கு பக்கமும் மண்ணைச் சரித்து மூடிட வேண்டும். குப்பாயம் எனும் சொல்லுக்கு மேல்சட்டை என்று பொருள். எனக்கு ஒரு குப்பாயம் வாங்கினேன் என்று சொல்லிப் பழகலாமே.

    ஆக ஒரு மகா ஞானியை சமாதி இடுதல் என்பது ஏதோ ஒரு குழியை வெட்டி அதில் வைத்து மூடிவிடுவது அல்ல. அந்த குழி எப்படி வெட்டப்பட வேண்டும், எங்கெங்கு அமைக்கலாம், அதில் என்னவெல்லாம் இட்டு வைக்க வேண்டும், உடலை என்னவெல்லாம் செய்து உள்ளே வைக்க வேண்டும், எப்படி மூட வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறைகள் இருப்பது திருமந்திரம் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

  • sarva-bopala-vaganathil-ezhumalayan

    நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் சுவாமி வீதிஉலாவின் போது நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி மனம் உருகி சுவாமியை வழிபட்டனர்.

    இதில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள், பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றன.

  • indru-endha-rasikku-vetri-kittum

    அக்டோபர் 14
    விளம்பி வருடம் – புரட்டாசி 28
    14-அக்-2018 ஞாயிறு ஸபர்4
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : பஞ்சமி கா 8.53
    நட்சத்திரம் : கேட்டை மா 4.12
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஏமாற்றம்
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – கவலை
    கடனம் – லாபம்
    சிம்மம் – நட்பு
    கன்னி – தடங்கல்
    துலாம் – மகிழ்ச்சி
    விருச்சிகம் – தாமதம்
    தனுசு – சுகம்
    மகரம் – வரவு
    கும்பம் – சிக்கல்
    மீனம் – அசதி