ஜூன் 11 – சிவகாசி சிவன் தேர்
விகாரி வருடம் – வைகாசி 28
11-ஜூன்-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : நவமி
திதி நேரம் : நவமி இ 9.54
நட்சத்திரம் : உத்திரம் ம 2.45
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
Author: லிங்கேஷ்
-
June 11 Indraya Naal Eppadi
-
Maduraiyil Ulaga siddhargal manadu
உலக சித்தர்கள் ஞானபீடம் நடத்தும் உலக சித்தர்கள் மாநாடு 2019 வருகின்ற ஜூன் மாதம் 22 சனி மற்றும் 23 ஞாயிறு இரண்டு நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.
இதில் 100008 ருத்ராட்சம் மூலம் உருவாக்கப்பட்ட 18 அடி உயர சிவலிங்கம் தரிசனம், 1008 திருவிளக்கு பூஜை, சித்தர்கள் முறைப்படி 108 யாக வேள்வி, 108 சங்குநாதம், கைலாய வாத்தியம், நமது பாரம்பரிய நாட்டுப்புற இசை போன்றவை நடைபெற உள்ளன.
இதேபோல பட்டிமன்றம், பரதநாட்டியம், யோகா, சிலம்பம், நீலகிரி படுகர் நடனம், மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் 640 பக்கம் கொண்ட மாநாடு மலர் வெளியீட படவுள்ளது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு அனுமதி இலவசம். 2 நாட்களும அன்னதானம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Tuesday do’s & dont’s
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று நம் வீடுகளில் பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். இதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?செவ்வாய் கிழமை என்பது துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய். இதன் காரணமாக இந்த நாளில் செல்வத்தை வீட்டை விட்டு வெளியேற்ற பெரியவர்கள் மறுத்து வருகிறார்கள். நம்மிடம் உள்ள லட்சுமியை தானம் செய்தால், லட்சுமி சென்று விடுவாள் என்ற நம்பிக்கை பண்டைய காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாதோ அதேப் போல் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி விடவோ அல்லது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி, செய்தால் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம்மை விட்டு வெளியேறிவிடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
-
Thiruparankundram gold car
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த தங்கத்தேரை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கத்தேர் இழுப்பது வழக்கம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேர் இழுக்க கட்டணமாக ரூ 2000/- வசூலிக்கப்படுகின்றது.
கடந்த 2 ஆண்டுகளாக பரமரிப்பு பணி காரணமாக இழுக்கப்படாமல் இருந்த தங்க தேர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தங்கத்தேரின் இயக்கம் அதிகாரிகளுக்கு திருப்தி அளித்ததை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு தங்கத் தேரை நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்து தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் திருக்கோவில் மைய மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தங்கத் தேரை திருக்கோவில் இணை இயக்குனர் பொறுப்பு அதிகாரி மாரிமுத்து தனது குடும்பத்தினருடன் தேரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு ஆராதனை நடைபெற்றது அதில் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தங்கத்தேர் புறப்பாடு மீண்டும் தொடங்கியது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
June 10 Rasi palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நலம்
ரிஷபம் – ஏமாற்றம்
மிதுனம் – பாராட்டு
கடனம் – நன்மை
சிம்மம் – வரவு
கன்னி – ஓய்வு
துலாம் – யோகம்
விருச்சிகம் – முயற்சி
தனுசு – வெற்றி
மகரம் – ஆக்கம்
கும்பம் – அசதி
மீனம் – உதவி
சந்திராஷ்டமம் – அவிட்டம், சதயம்
-
June 10 Indraya Nalla Neram
ஜூன் 10 – இன்றைய நல்ல நேரம்
விகாரி வருடம் – வைகாசி 27
10-ஜூன்-2019 திங்கள்
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி இ 12.09
நட்சத்திரம் : பூரம் மா 4.15
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Kungumam Vaipadhin Magimaigal
பொதுவாகவே நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்களை பார்ப்பது அறிதாகவே இருக்கிறது. இப்போது எல்லாம் ஸ்டிக்கர் பொட்டு தான். ஆனால் குங்குமம் வைப்பதன் மகிமை குறித்து தெரியாதவர்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். குங்குமம் வைத்துக் கொள்வதால் ஏற்படும் பலன்னகளை பார்ப்பதற்கு முன் குங்குமம் எப்படி தயாராகிறது என்பதை பார்ப்போம்.
படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துத்தான் குங்குமம் செய்ய வேண்டும். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச்சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. தொற்று நோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதால் சக்தி கிடைக்கிறது. மூளைக்குச் செல்லும் நாம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் அதை கட்டுப்படுத்தக் கூடிய இடம் நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் சூடு தணிகிறது.
இதனால் குங்குமம் இட்டுக்கொள்பவருக்கு புதிய சக்தி கிடைக்கிறது. குங்குமம் முறையாக தயாரித்திருந்தால்தான் இந்த பலன்களை அனுபவிக்க முடியும். கலப்படமான குங்குமத்தை இட்டுக்கொள்வதால் சில பிரச்னைகள் வரலாம்.
ஆன்மிகத்தில் முக்கிய இடம் வகிக்கும் குங்குமம் அழகு சாதன பொருட்கள் வரிசையிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட்ட பெண்களைப் பார்க்கும்போது லக்ஷ்மிகரமாக தோன்றுவதைக் காணலாம்.
நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால் தனிப்பலன் கிடைகும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம். சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் மற்றும் விட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.
-
Dyanam Endral enna
பதஞ்சலி முனிவரின் கருத்துப்படி “குறித்த ஒரு பொருளின் மீது மனத்தினை நிறுத்திவைக்கும் நிலையில் சிறிது நேரம் நிலைத்திருத்தல்” தியானம் எனப்படும்.
பலர் தாம் தியானம் செய்வதாக நினைத்துக்கொண்டு தாரணையே செய்கின்றனர். இது தியானத்தின் முதற்படியாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் மனம் அசைவற்று நிறுத்தப்படுகின்றது. அசைவற்று நிற்கும் மனம் அப்படியே நிலைத்து நிற்கும் போது தியானமாக மாறுகின்றது. இதனையே பதஞ்சலி முனிவர் “தத்ர ப்ரத்யயைகதானத த்யானம்” என யோகசூத்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
மனம் தான் வேறு நினைக்கின்ற பொருள்வேறு, என்றில்லாமல் அதுவாகவே அது மாறுதல் தியானத்தின் ஆரம்பம் உதாரணம், தாமரைப்பூவை நினைத்துத் தியானம் செய்பவர் தானே தாமரை மலராகி அதன் மணம், குணம் போன்ற அனைத்துத் தன்மைகளையும் அறிந்தவராவார். மனத்திற்கு அப்பாற்பட்டது தியானம்.
தியானம் ஆரம்பத்தில் மனதின் செயற்பாடாக இருந்த போதிலும் இறுதியில் அதன் செயற்பாடு அற்றுப் போகின்றது.
தியானம் செய்பவர் தன்னை மறந்தவராகின்றார். இது தூக்க நிலைபோன்று இருக்கும். ஆனால் வழமையான நித்திரைக்கும் தியானத்திற்கும் வேறுபாடு உண்டு. நித்திரை சாதாரண உணர்வு நிலை, தியானமோ உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலை. அதாவது மனதைக் கடந்து உணர்வு பிரிந்து உள்முகப்படும் நிலை. இந்நிலையில் புதுவித அனுபவங்களையும் இன்பங்களையும் பெறலாம்.
தியானத்தில் ஈடுபடும் ஒருவர் கவனத்தில் எடுக்க வேண்டியவை.,,,
முடிந்தவரை தனி அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல் வேண்டும். அறையில் முனிவர்கள், ரிஷிகள், மகான்கள், தேவர்கள் முதலியோரின் படங்கள் தொங்கவிடப்படலாம். சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி மலர்களால் அலங்கரித்து அறையைத் தூய்மையுடையதாகவும், வாசனையுடையதாகவும் வைத்துக்கொள்ளலாம்.
கோபம், பயம், தீய எண்ணங்கள் அற்று நல்ல எண்ணங்களுடன் அறையில் நுழைதல், தீயவர்களை அறையினுள் அழைத்துச் செல்லாதிருத்தல், அறையினுள் விதண்டா வாதம் பேசுதல், நித்திரை செய்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
-
Atthi Varadhar
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவம், ஜூலை 1 ஆம் தேதி துவங்குவதை அடுத்து குளத்துநீர் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை வெளியில் எடுப்பதற்கான நடவடிக்கையில் இதுவும் ஒன்று. குளத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், கிழக்கு கோபுரம் அருகில் உள்ள பொற்றாமரை குளத்தில் விடப்படுகிறது. மேலும், குளத்தில் உள்ள மீன்களையும் பிடித்து அந்த குளத்தில் விட இருக்கிறது.
அனந்த சரஸ் குளத்தின் தண்ணீர் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. முழுவதும் வரும், 20ம் தேதிக்கு மேல் எடுக்கப்படும். அதன் பின். குளத்தில் அடியில் தேங்கியுள்ள சேறும், சகதியும் அப்புறப்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.
இம்மாத இறுதிக்குள் முழுதும் சுத்தம் செய்து, குளத்தில், மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர் வெளியில் எடுக்கப்படுவார். பின், அதற்கான ஆகம விதிபடி பூஜைகள் முடிந்து, ஜூலை, 1 முதல் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக 48 நாட்கள் அத்தி வரதர் எழுந்தருள்வார்.
-
Rasi palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நிம்மதி
மிதுனம் – புகழ்
கடனம் – பயம்
சிம்மம் – அன்பு
கன்னி – லாபம்
துலாம் – உற்சாகம்
விருச்சிகம் – கவனம்
தனுசு – ஆக்கம்
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – சுகம்
மீனம் – பக்தி
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம்