ஜூன் 15 காஞ்சிப் பெரியவர் பிறந்த தினம்
விகாரி வருடம் – வைகாசி 32
காஞ்சிப் பெரியவர் பிறந்த தினம்
15-ஜூன்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி ம 3.30
நட்சத்திரம் : விசாகம் கா 11.10
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Author: லிங்கேஷ்
-
June 15 Kanchi Periyavar Pirandha dhinam
-
Irulappaswamy Thirukoil Kumbabishegam
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிளங்காட்டூர் ஏ.நெடுங்குளம் இருளப்பசாமி திருக்கோயில் கும்பாபிசேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடந்தது.
கிளங்காட்டூர்ஏ.நெடுங்குளம் கிராம எல்லையில் அமைந்துள்ளது இருளப்பசாமி கோயில். கிளங்காட்டூரைச் சுற்றியுள்ள 14 கிராமங்களின் காவல் தெய்வமாகும். இக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக திருப்பணி வேலைகள் நடந்து வந்தன.
பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிசேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தினசரி யாகசாலை பூஜைகளுடன் வேதபாராயணமும் படிக்கப்பட்டது. இன்று காலை புனித நீர் அடங்கிய கலசத்தை மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ஆலய குருக்கள் தெய்வசிகாமணி பட்டர் தலைமையில் சிவாச்சார்யார்கள் தலையில் சுமந்து யாகசாலையை வலம் வந்தனர்.
காலை 9.30 மணிக்கு கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிசேகத்தை முன்னிட்டு அன்னதானமும் நடை பெற்றது.
-
Eri Kaatha Ramar Bramorchavam
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மூன்றாம் நாள் விழாவில் கருடசேவை நடைபெற்றது. இதில் கருணாகரப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா விழா நடைப்பெற்து.





-
Saneeswara bagavan veedhi ula
புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பிரமோற்சவத்தையொட்டி விடிய, விடிய நடைபெற்ற தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அரிய நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. நவகிரக தலங்களில் ஒன்றான இக்கோயிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி அபய ஹஸ்த முத்திரையுடன் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்துவருகிறார் . சனி தோஷம் நீங்க வேண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர் .
புகழ்பெற்ற இக்கோயிலின் வைகாசி விசாக ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அதே மாதம் 29ஆம் தேதி பிரம்மோற்சவத்திற்கான கொடி ஏற்றப்பட்டது. 06.06. 2019 அன்று செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து 7 ஆம் தேதி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிய செண்பக தியாகராஜ சுவாமி யதாஸ்தானத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பத்தாம் தேதி அன்று பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர வீதி உலா நடைபெற்று முடிந்தது.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12 ம் தேதி அன்று நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே காணக் கிடைக்க கூடிய அரிய நிகழ்ச்சியான தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நேற்று (13ம் ஆம் தேதி ) இரவு நடைபெற்றது. சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் காட்டப்பட்டது . இதை தொடர்ந்து வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
-
Thirupathy Ezhumalayan Vaira Kavasam
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த ஜேஷ்டாபிஷேகத்தில் வைரக்கவசம் அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தினால் சுவாமி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த ஜேஷ்டாபிஷேகம் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும்.


அதன்படி இந்தாண்டு 3நாட்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில் சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது.



இதில் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து மாலை உற்சவர்களுக்கு வைர கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2வது நாளான நாளை முத்து கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.


3வது நாள் மீண்டும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே சுவாமிக்கு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர் .
-
Rasi palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – லாபம்
ரிஷபம் – நலம்
மிதுனம் – சுகம்
கடனம் – நட்பு
சிம்மம் – வெற்றி
கன்னி – போட்டி
துலாம் – அசதி
விருச்சிகம் – பாராட்டு
தனுசு – பொறுமை
மகரம் – நற்செயல்
கும்பம் – புகழ்
மீனம் – நன்மை
சந்திராஷ்டமம் – ரேவதி, அசுவினி
-
June 14 – Pradhosham
ஜூன் 14 – பிரதோஷம்
விகாரி வருடம் – வைகாசி 31
பிரதோஷம்
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
14-ஜூன்-2019 வெள்ளி ஷவ்வால்10
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி மா 4.35
நட்சத்திரம் : சுவாதி கா 11.31
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Thirupathy Ezhumalayan silai ragasiyangal
திருப்பதி ஏழுமலையான் சிலையின் மகிமைகள் பலருக்கும் தெரியாது. பல சுவாரசியங்கள் அடங்கிய திருப்பதி சிலையின் ரகசியங்கள் இதோ… .
திருமலை 3,000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.
3,000 அடி உயரத்தில் உள்ள திருமலையில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள் ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.
திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான சிலாதோரணம் என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும்.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை.
எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை.
எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.
-
Selva vinayagar koil Kumbabishegam
அரக்கோணம் அருகே அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய புனராவர்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அருளாசி பெற்றனர்..
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பகுதியில் நீண்டகாலமாக சிறிய கோயிலாக இருந்து வந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் தற்போது மூன்று தள விமானத்துடனும் பல சிற்ப வேலைபாடுகளுடன் பெரிய கற்கோயிலாக கட்டப்பட்டு அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் இதன் புனராவர்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழா கடந்த 10 தேதி பந்தகால் நடுதல், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் என துவங்கி நாள் தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்து. இதன் தொடர்ச்சியாக இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் வேத மத்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்துக்கொண்டு அருளாசி பெற்றனர். பின்னர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது….
-
Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – ஜெயம்
ரிஷபம் – கவலை
மிதுனம் – உழைப்பு
கடனம் – ஊக்கம்
சிம்மம் – பேராசை
கன்னி – சோதனை
துலாம் – ஏமாற்றம்
விருச்சிகம் – தொல்லை
தனுசு – உற்சாகம்
மகரம் – சிந்தனை
கும்பம் – பொறுமை
மீனம் – செலவு
சந்திராஷ்டமம் – உத்திரட்டாதி, ரேவதி