ஜூன் 17 – பவுர்ணமி
விகாரி வருடம் – ஆனி 2
பவுர்ணமி
17-ஜூன்-2019 திங்கள் ஷவ்வால்13
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சூன்ய
திதி நேரம் : பவுர்ணமி ம 2.49
நட்சத்திரம் : கேட்டை கா 11.44
யோகம் : மரண-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Author: லிங்கேஷ்
-
June 17 – Full moon Day
-
Thirupathy Jestabishegam
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் சிலையை பாதிக்காமல் இருப்பதற்காக நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக மூலிகை திரவியங்களால் நடைபெற்ற அபிஷேக ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
இதனால் சுவாமி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் உற்சவத்தை ஜேஷ்டாபிஷேகம் எனப்படும். இந்த உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும்.
அதன்படி இந்தாண்டு 3நாட்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில் சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது.
முதல் நாள் வைர கவசமும் , இரண்டாவது நாள் முத்து கவசமும் அணிவிக்கப்பட்டு சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மூன்றாவது நாளான இன்று பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது.




இதைதொடர்ந்து மாலை உற்சவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீண்டும் தங்க கவசம் அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள், அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர் .
-
Agni Vasandha vizha

காட்பாடி அடுத்த அம்முண்டி கிராமத்தில் முதலாம் ஆண்டு அக்னி வசந்த விழாவை முன்னிட்டு இன்று தபசு மரம் ஏறும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை காண சுற்றிலும் உள்ள கிராமத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீ திரௌபதி அம்மனை வழிபட்டு சென்றனர்.


-
Thirupathy Muthu Kavasa vaganam
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகத்தில் முத்து கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மலையப்ப சுவாமி .


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான இன்று கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் 11 மணியில் இருந்து 2 மணிவரையிலும், மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரையிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது.


மாலை உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்து, சகஸ்ர தீபலங்கார சேவை மண்டபத்தில் வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஊஞ்சல் சேவை முடிந்ததும் மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் முத்துக்கவசத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.



ஜேஷ்டாபிஷேகத்தின் 2-வது நாளையொட்டி கோவிலில் இன்று வசந்த உற்சவம் ரத்து செய்யப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வதுநாளான நாளை ஞாயிறன்று உற்சவ மூர்த்திகளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. இந்த தங்க கவசம் அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட உள்ளது.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – விருப்பம்
ரிஷபம் – நற்செயல்
மிதுனம் – துணிவு
கடனம் – பயம்
சிம்மம் – செலவு
கன்னி – புகழ்
துலாம் – ஆதாயம்
விருச்சிகம் – நஷ்டம்
தனுசு – துணிச்சல்
மகரம் – பெருமை
கும்பம் – பொறுமை
மீனம் – கவலை
சந்திராஷ்டமம் – பரணி, கார்த்திகை
-
June 16 – Indraya Naal Eppadi
ஜூன் 16 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – ஆனி 1
16-ஜூன்-2019 ஞாயிறு
கரிநாள்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : சூன்ய
திதி நேரம் : சதுர்த்தசி ம 2.56
நட்சத்திரம் : அனுஷம் கா 11.10
யோகம் : மரண யோகம்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Valampuri Sangu Magimaigal
108 அல்லது 1008 சங்குகளைக் கொண்டு புனித தீர்த்தத்தை அதில் நிரப்பி இறைவனுக்குச் செய்யப்படும் அபிஷேகம் சங்காபிஷேகம் எனப்படும். கார்த்திகை மாதம் சோம வாரத்தன்று சிவபெருமானுக்குச் செய்வது மிகவும் சிறப்பானது. சங்காபிஷேகம் கண் குளிரக் கண்டு இறைவனைத் தரிசித்து வழிபடுவதால் மனமகிழ்வு கூடும். சகல செல்வங்களும் வந்து சேரும். இப்படிப் பெருமைகள் பெற்ற வலம்புரிச் சங்கில் காசுகளை வைத்து முக்கிய தினங்களில் வழிபட்டு வந்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது.
ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தல் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.
கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நனம் செய்தால், நமக்கு
பிரம்மஹத்தி தோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். "சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ ! "அங்க லஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்" என்று விளங்குகிறது.
சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப்பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலப்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
அதிகக் கடன் வாங்கியவர்கள் பெளர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16- வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
சுத்தமான் உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது ஓடிவிடும்.
ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்தால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உதராட்சம் இட்டு அது ஊரிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோசஹ்ங்கள் அனைத்தும் விலகும்.
-
Dhyanam
இவற்றிலிருந்து விடுபட்டு, மனச்சஞ்சலமற்று, அமைதியாக வாழ தியானம் துணை செய்யும். தியானம் ஒரு பூரண விஞ்ஞானமாகவும் தேவரகசியங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. ஒரு மனிதனின் தெய்வீகத்தன்மையை வெளிக்கொணரக்கூடிய அற்புத சாதனமாக தியானம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
சுவாசத்தையே அவதானித்து தியானம் செய்தல்
எப்போதும் தியானம் செய்யும் போது மனம் அமைதியுடன் இருக்கத்தக்கதாக உடலைத் தளர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். நன்றாக மூச்சை உள் இழுத்து வெளி விடுக. பத்து தடைவைகள் மிக அமைதியாக ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளிவிடுக. பின்பு சாதாரணமாக சுவாசிக்குக. சுவாசிக்கும் போது மூக்குத் துவாரத்தினூடாகச் சுவாசம் செல்வது தொடக்கம் நுரையீரலை அடையும் வரை மனதைக் கொண்டு செல்க, மீண்டும் சுவாசம் வெளிவரும் வரை சுவாசத்தோடு மனதைக் கொண்டு வருக. நாளடைவில் மனம் கட்டுப்பட்டு தியானம் சித்திக்கும்.
மன்னிப்புத் தியானம்
இத்தியானம் செய்வதால் பிறரை மன்னிக்கும் மனப்பாங்கும், சகிப்புத் தன்மையும் உருவாகும். பதகளிப்பு, பதற்றம் அற்றுப் போவதோடு கொபம் குறைகின்றது. நிமிர்ந்து இருந்து கொண்டு நீங்கள் யாரால் பாதிக்கப்பட்டீர்களோ அவரது உருவத்தை மனதில் கொண்டு வந்து புருவத்தை உற்று நோக்கி அவரை மன்னித்தேன் எனப் பலமுறை கூறுங்கள். இதனால் அவரின் நடத்தையை மன்னிப்பதென்று அர்த்தமல்ல. அவரைப் பற்றிய கோப உணர்வை எம்மிடமிருந்து அகற்றுவதே அதன் நோக்கம். இதனால் நாம் பிறரிடம் கோபம் கொள்ளாத நிலை ஏற்படுகின்றது. மனம் அமைதியடைகின்றது.மேலும் சில தியான முறைகள்
தலையின் உச்சிக்கு அப்பால் ஒரு தாமரை இருப்பதாகக் கருதி அதன் மையத்தை குணமாகவும். காம்பை ஞானமாகவும் கருதித் தியானம் செய்யலாம். இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும் அதில் ஒரு சுடர் எரிவதாகவும் அச்சுடரை உங்கள் ஆண்மாவிற்கு ஆண்மாவாகிய கடவுளாகவும் நினைத்து தியானிக்கலாம்.தொண்டைக்குழிக்குக் கீழே ஆமை வடிவில் அமைந்துள்ள நாடியில் மனதைச் செலுத்த மனம் அசைவுற்று நிற்கும் இதனை “கூர்ம நாட்யாம் ஸ்னைதர்யம்” என்ற பதஞ்சலி சூத்திரம் விளக்குகின்றது. புருவக மத்தியில் மனதை நிலை நிறுத்தியும் தியானம் செய்யலாம்.
ஏதாவது கடவுளின் திருவுருவத்தை மனக் கண்ணில் கொண்டு வந்தும் தியானம் செய்யலாம். எம்மால் வீணாக்கப்படும் பல மணி நேரங்களில் ஒரு சில நிமிடங்களை தியானத்திற்கு செலவிட்டால் நிச்சயம் எங்கள் வாழ்வில் கோபம். பயம். துக்கம், கவலை, ஆசை என்பன நீங்கப்பெற்று நிரந்தர மன அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் உண்டாகி தெய்வீக சக்தியும் பெருகும். வாழ்வும் வளம்பெறும்.
-
Chidamparam Natarajar koil
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியை ஏற்றி வைக்கிறார்.
ஜூன் – 30 – வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா
ஜூலை 1 சூரிய பிறை வாகனத்தில் வீதிஉலா
ஜூலை 2 வெள்ளி பூதவாகனத்தில் வீதிஉலா
ஜூலை 3 தெருவடைச்சான் உற்சவம்
ஜூலை 4 வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா
ஜூலை 5 தங்க கைலாச வாகனம்
ஜூலை 6 தங்க ரதத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா
ஜூலை 7 தேர்த் திருவிழா, இரவு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை
ஜூலை 8 சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம்
பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன விழா -
Rasi Palan
இன்று பொறுமை காக்க வேண்டிய ராசி….
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – பொறுமை
மிதுனம் – லாபம்
கடனம் – செலவு
சிம்மம் – சுபம்
கன்னி – சினம்
துலாம் – மேன்மை
விருச்சிகம் – பாசம்
தனுசு – வரவு
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – தடங்கல்
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – அசுவினி, பரணி