Author: லிங்கேஷ்

  • February 24 2024 Maasi maham

    பிப்ரவரி 24 – மாசிமகம்
    சோபகிருது வருடம் – மாசி 12
    பவுர்ணமி
    24-பிப்-2024 சனி
    மாசிமகம், குடந்தை சக்கரபாணி,
    காரைமடை அரங்கநாதர் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி மா 6.51
    நட்சத்திரம் : மகம் இ 11.05
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Maasi maham vazhipadu

    மாசி மகம் என்பது மாசி மாதப் பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது ‘கடலாடும் விழா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிறவி என்னும் பெருங்கடலில் அமிழ்ந்து கிடக்கும் மானிட ஆன்மாவானது இறைப் பரம் பொருளின் அருட் கருணை என்னும் ஆனந்த வௌ்ளத்தில் மூழ்கித் திளைத்தல் வேண்டும் என்பதனை குறிப்பால் உணர்த்தலே இவ்விழாவின் உள்ளார்ந்த நோக்கம் ஆகும்.  இந் நன்னாளில் தான் உமையவள் தக்கனின் மகளாக அவதாரம் செய்தாள்.

    மாசி மகத் தன்று தக்கன் தன் மனைவியாகிய வேதவல்லியுடன் யமுனை ஆற்றில் நீராடினான். பின் அவன் அந்நதியின் தாமரை மலரில் இருந்த வலம் புரிச் சங்கினைத் தொட அது பெண்ணாய்மாறிற்று. இச்செயல் ஈசனின் திருவருளால் நிகழ்ந்தது என்பதனை உணர்ந்து அப்பெண்ணிற்கு தாட்சாயிணி எனப் பெயரிட்டு வளர்த்தான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்தநாளில் தான் திருமால்வராக அவதாரம் எடுத்து பூமியைக் கடலில் இருந்து  மீட்டார் என வைணவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்நாள் முருகனுக்கும் உரிய நாளாகும்.
     
    மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில்தான் கோவில்கள் அனைத்திலிருந்தும் தெய்வத் திருவுருவங்கள் வீதியுலாவாகப் புறப்பட்டு, புனித நதிக்கரைகள், தீர்த்தக் குளங்கள், கடல் என்று பல இடங்களில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    மாசி மகத்தன்று புண்ணிய நதிகள், தீர்த்தக்குளங்களில் நீராடுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வையுங்கள். அம்மன் கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தரிசியுங்கள். இன்றைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    மகா புண்ணிய நாளான மாசிமகத்தன்று தானம் செய்யுங்கள். வீட்டின் தரித்திரம் விலகும்; ஐஸ்வரியம் பெருகும்!

  • Theni vilakku poojai

    பௌர்ணமியை முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு ஏராளமான பெண்கள் திருவிளக்கேற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.தேனி நகரில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

    இந்தத் திருக்கோயிலில் இன்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது

    முன்னதாக ஏராளமான பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட திருவிளக்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்து விளக்கேற்றி தங்கள் சுற்றும் சூழலும் நலப் பெற வேண்டி திருவிளக்கு பூஜை நடத்தினர்

    பின்னர் பச்சை நிற வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்து வண்ணமலர் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு மகா தீபாராதனை நட்சத்திர தீபாராதனை காட்டிய பின்பு சோடச உபச்சாரம் நடத்தினர்

    அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பௌர்ணமி தினத்தில் மீனாட்சி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை கண்டு தரிசித்துச் சென்றனர்.

  • Thiruchendur car festival

    உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 12 நாடைபெறும் திருவிழாவில் நாள்தோறும்  காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் தங்கச் சப்ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து  8-ம்திருவிழா அன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழா நாட்களில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சூரிய காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், வேல் குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 05 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மாசித்திருவிழா தேரோட்டம் தொடங்கியது.  முதலில்  விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது ரதவீதி நான்கிலும் பவனி வந்து  நிலையம் வந்து சேர்ந்தது. அதனைத்தொடர்ந்து  சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது. இந்த பெரிய தேரை மாலை முரசு நாளிதழ் நிர்வாக இயக்குனர்  இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் 'அரோகரா' பக்தி கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து  நிலையம் வந்து சேர்ந்தது.

    தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. இந்த தேரோட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெறுகிறது.

  • February 23 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நலம்
    ரிஷபம்         – ஓய்வு
    மிதுனம்     –  நன்மை  
    கடகம்         –  வரவு
    சிம்மம்         –   கவனம்
    கன்னி         –    ஆக்கம்
    துலாம்         –     செலவு
    விருச்சிகம்     –  தனம்
    தனுசு         –     புகழ்
    மகரம்         –    ஆர்வம்  
    கும்பம்         –      லாபம்
    மீனம்         –      பக்தி  
    சந்திராஷ்டமம்    –       மூலம், பூராடம்

  • February 23 2024 Indrayanaal

    பிப்ரவரி 23 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மாசி 11
    23-பிப்-2024 வெள்ளி
    திருச்செந்தூர், பெருவயல் முருகன்,
    மதுரை இம்மையில் நன்மை தருவார்,
    வடிவீஸ்வீ வரம் அழகம்மை தேர்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி மா 4.54
    நட்சத்திரம் : ஆயில்யம் இ 8.39
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Karur thirukalyana vaibavam

    கரூர் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ உன்பத்தாராகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.

    கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராஹி அம்மனுக்கு மாசி மாத இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய அருகே பிரத்தியேக மேடைகள் அமைக்கப்பட்டு உற்சவர் அருள்மிகு ஸ்ரீ உன்மத்த பைரவர் மற்றும் உன்மத்த வாராகி அம்மனை கொழுவிருக்க செய்தனர். தொடர்ந்து சிறப்பு திருமண கோலத்தில் காட்சி அளித்த வாராஹி அம்மனுக்கு சிவ பக்தர்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற பிறகு மேளதாளங்கள் முழங்க உன்மத்த பைரவர் மற்றும் உன்மத்த வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சுவாமிகளுக்கு கண்கானம் கட்டிய பிறகு சுவாமிக்கு பல்வேறு வேத மந்திரங்கள் ஓதியபடி திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

    அதை தொடர்ந்து உன்மத்த பைரவர் மற்றும் உன்மத்த வாராகி அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் பால் பழம் வழங்கும் நிகழ்ச்சியும் மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து உதிரிப் பூக்களால் லட்சார்ச்சனை நாமாவளிகள் கூறிய பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு ஆலாத்தி எடுத்தனர்.

    கரூர் மினி பேருந்து நிலையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற உன்மத்த பைரவர், உன்மத்த வாராகி அம்மன் திருமண நிகழ்வை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிலர் தங்களது வாரிசுகளுக்கு திருமணம் சீக்கிரம் நடைபெற ஜாதகத்தை வழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.

    அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு, அன்னதானமும் வழங்கப்பட்டது. உன்மத்த வாராஹி அம்மன் திருக்கல்யாண வைபகம் நிகழ்ச்சியை ஆலய சிவாச்சாரியார் மற்றும் சிவனடியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

  • Thiruthani murugan iswarya rajini

    அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்படும் முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இயக்குனர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவில் கோயிலுக்கு வருகை தந்து மூலவருக்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டார். பின் அவருக்கு அச்சகர்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினர்.

  • Muneeswarar koil kumbabishegam

    ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற 33 அடி  ஸ்ரீ குழந்தை  முனீஸ்வரர் ஆலய  கும்பாபிஷேக விழாவில் சாமி வந்து ஆடிய பக்தர்கள்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமத்தில் உள்ள பாலாற்றங்கரையோ ரம் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெரிய முழு உருவ குழந்தை முனீசுவரர் ஆலயத்தில் இன்று 11 மணிக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைப்பெற்றது,

     கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று மங்கள வாத்தியத்துடன் ஸ்ரீ கணபதி ஹோமம் பூஜை தொடங்கப்பட்டு தொடர்ந்து ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுபதி, வாஸ்து சாந்தி பிரவேச பலி அங்குரார்பணம், நாடி சந்தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க  புனிதநீர்  ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேதங்கள், மற்றும் மந்திரங்கள் ஓத குழந்தை  மூலவர் முனீசுவரர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு, திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைப்பெற்றது, அப்போது பக்தர்கள் மீது சாமி வந்து ஆடினர்

     பின்னர் புனித நீர் பக்தர்கள் தெளிக்கக்பட்டு அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவில் சுற்றுவட்டார 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

  • February 22 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – செலவு
    ரிஷபம்         – இன்பம்
    மிதுனம்     –  நட்பு  
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   ஜெயம்   
    கன்னி         –    களிப்பு
    துலாம்         –     பரிசு  
    விருச்சிகம்     –  செலவு  
    தனுசு         –     கவலை
    மகரம்         –    உயர்வு
    கும்பம்         –      பரீதி
    மீனம்         –      முயற்சி
    சந்திராஷ்டமம்    –       கேட்டை, மூலம்