Author: லிங்கேஷ்

  • Murugaperumanuku ugandha abishegangal

    முருக பெருமானுக்கு செய்யும் பலவிதமான அபிஷேகங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கும். முருகனுக்கு செய்யும் எந்த அபிஷேகம் என்ன பலனை அளிக்கும் என்பதை பார்க்கலாம்.

    மஞ்சள் தூள் – நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
    திருமஞ்சனத்தூள் – நோய் தீர்க்கும்
    நெய்சுகவாழ்வு, – மோட்சம்
    சர்க்கரை – எதிரியை ஜெயிக்கும்
    இளநீர்நல் – சந்ததியளிக்கும்
    கருப்பஞ்சாறு – ஆரோக்கியமளிக்கும்
    நார்த்தம்பழம் – சந்ததி வாய்க்கும்
    நன்னீர் – நினைத்தது நடக்கும்
    நல்லெண்ணை – நலம் தரும்

    பச்சரிசிமாவு – கடன் தீரும் பாபநாசம்
    பஞ்சகவ்யம்தீதழிக்கும் – ஆன்மசுத்தி
    பசும்பால்நீண்ட – ஆயுள் தரும்
    பசுந்தயிர் – மகப்பேறு வாய்க்கும்
    சந்தனம் – அகம், சுவர்க்க போகம் தரும்
    பன்னீர் – சருமம் காக்கும்
    கும்பஜலம் – பிறவிப்பயன் அளிக்கும்
     சந்தாபிஷேகம் – நலம் எல்லாம் அளிக்கும்

    சொர்ணம், ரத்னாபிஷேகம் – சகல சவுபாக்கியமும் கிட்டும்.
    பஞ்சாமிருதம் – தீர்க்காயுள், வெற்றி தரும்
    தேன்சுகம், – சங்கீத விருத்தி
    சாத்துக்குடி – துயர் துடைக்கும்
    எலுமிச்சை – யமபய நாசம், நட்புடை சுற்றம்
    திராட்சை – திட சரீரம் அளிக்கும்
    வாழைப்பழம் – பயிர் செழிக்கும்
    மாம்பழம் – செல்வம், வெற்றி தரும்

    பலாப்பழம் – மங்களம் தரும் யோக சித்தி
    மாதுளை – பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
    தேங்காய் துருவல் – அரசுரிமை
    திருநீறு – சகல நன்மையும் தரும்
    அன்னம்விளை நிலங்கள் – நன்மை தரும்

  • Dhanalakshmi Gayathri viradham

    தனலட்சுமி
    (செல்வம் பெற)
     
    ஓம் தம்தனதாயை வித்மஹே
    ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி
    ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்
     
    பராசக்தி
    (வாக்குவன்மை பெற)
     
    ஓம் தசவனாய வித்மஹே
    ஜ்வாமாலாயை ச தீமஹி
    தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்
     
    பிரணவதேவி
     
    ஓம் ஓம்காராய வித்மஹே
    பவதாராய தீமஹி
    தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத்
     
    தரா
     
    ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே
    சர்வ சித்தை ச தீமஹி
    தன்னோ தரா ப்ரசோதயாத்
     
    தூமாவதி
     
    ஓம் தூமாவத்யை ச வித்மஹே
    சம்ஹாரின்யை ச தீமஹி
    தன்னோ தூம ப்ரசோதயாத்
     
    நீலபதாகை
    (தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)
     
    ஓம் நீலபதாகை வித்மஹே
    மஹாநித்யாயை தீமஹி
    தன்னோ நித்ய ப்ரசோதயாத்
     
    நீளா
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
    தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே
    ஸ்ரீ பூ சகை ச தீமஹி
    தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்
     
    ஸ்ரீ(மகாலட்சுமி)
     
    ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
    தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்

     

  • February 26 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நன்மை
    ரிஷபம்         – பணிவு
    மிதுனம்     –  பரிசு
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –    லாபம்  
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     –  சுகம்
    தனுசு         –     மேன்மை
    மகரம்         –    பரிவு
    கும்பம்         –      களிப்பு
    மீனம்         –      நஷ்டம்
    சந்திராஷ்டமம்    –       அவிட்டம்

  • February 26 2024 Subamuhurthanaal

    பிப்ரவரி 26 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – மாசி 14
    சுபமுகூர்த்த நாள்
    26-பிப்-2024 திங்கள்
    சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை இ 10.59
    நட்சத்திரம் : பூரம் அ.கா 1.38
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Thirupathy birthday

    கடந்த 1130 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே தற்போதைய நான்கு மாட வீதியில் அக்ரஹாரம் கட்டுவதற்காக ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    அதற்கு முன்னர் வரை திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமி கோவில் மட்டுமே இருந்தது. திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் தற்போதைய கபில தீர்த்தம் பகுதியில் அப்போது கோட்டூர் என்ற பெயரில் ஒரு சிறிய கிராமம் இருந்துள்ளது.

    அந்த கிராமத்தில் வசித்தவர்கள் தினமும் திருப்பதிக்கு வந்து கோவிந்தராஜ சுவாமிக்கு கைங்கரியம் செய்துள்ளனர். ஆனால் கோவில் அருகிலேயே இறை கைங்கரியகாரர்கள் இருப்பது நல்லது என்று கருதிய ராமானுஜாச்சாரியார் 1130 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அக்ரஹாரம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

    அன்றைய தினமே திருப்பதி நகரின் நிர்மாண துவக்க நாளாகும். எனவே இதனை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று திருப்பதிக்கு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

     அந்த வகையில் இன்று திருப்பதிக்கு 894 ஆவது பிறந்த நாள் ஆகும். நகரின் 894 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவிந்தராஜ சாமி கோவிலில் உள்ள ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் சன்னதியில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

     தொடர்ந்து திருப்பதி நகரில் முக்கிய வீதிகள் வழியாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி தலைமையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.

  • February 25 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – சுகம்
    ரிஷபம்         – ஆர்வம்
    மிதுனம்     –  புகழ்
    கடகம்         –  துயரம்
    சிம்மம்         –   போட்டி  
    கன்னி         –    சோர்வு  
    துலாம்         –     முயற்சி  
    விருச்சிகம்     –  பரிவு
    தனுசு         –     உதவி
    மகரம்         –    நன்மை  
    கும்பம்         –      ஓய்வு
    மீனம்         –      நலம்
    சந்திராஷ்டமம்    –       உத்திராடம், திருவோணம்

  • February 25 2024 Indrayanaal

    பிப்ரவரி 25 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மாசி 13
    25-பிப்-2024 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை இ 8.54
    நட்சத்திரம் : பூரம் முழுவதும்0.00
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • karuda vaganathi perumal

    ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் மாசிதெப்பத் திருவிழாவில் 5ம் நாள் கருட வாகனத்தில் சுவாமியும் அன்ன வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் வீதி புறப்பாடு. திரளான பக்தா்கள் தாிசனம்.

    தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள  108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாகவும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் விளங்கிறது.  இத்திருத்தலத்தில்தான் சுவாமி நம்மாழ்வாா் திருஅவதாரம் செய்தாா். மாசி மாதம் திருவிசாகத்தன்று தாமிரபரணி பொருநல் சங்கனித்துறையிலிருந்து தீா்த்தம் எடுத்துக் காய்ச்சவும் என உத்தரவு நம்மாழ்வாாிடமிருந்து  பெற்று, மதுரகவி ஆழ்வாரால்  கை படாதா உற்ச்சவா் திருமேனி  நமக்கு வணங்க கிடைத்தது. இந்த நன்னாளைப் போற்றும் முறையிலே ஆண்டுதோறும் மாசி தெப்ப திருவிழா 13 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

    இந்த ஆண்டுக்கான மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றம் கடந்த 20ம் தேதி தொடங்கி  தொடா்ந்து நடைபெறுகின்றது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி நம்மாழ்வாா்  காலை வீதி புறப்பாடு,திருமஞ்சனம் நடைபெறுகின்றது.  மாலையில் சுவாமி  நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

    இன்று ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், கோஷ்டி நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்றபிரானும், அன்னவாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். அத்யாபக கோஷ்டியின்   நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சாம வேத சாரமான திருவாய்மொழி பாசுரங்களை விண்ணப்பத்து முன் செல்ல சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    சுவாமி நம்மாழ்வாா் ஏழுந்தருள  குடைவரை பெருவாயிலில்  தீபாராதனை நடைபெற்றது. கருட சேவை மாட வீதிகளில் வலம் வந்தது. பக்தா்களின் நாம சங்கீா்த்தனம் பாடியபடி பின் சென்றனா். வருகின்ற 28ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 29ம் தேதி இரவில் சுவாமி  நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலத்திலும், சுவாமி பொலிந்துநின்றபிரானும் எழுந்தருளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    30ம் தேதி இரவில் சுவாமி நம்மாழ்வார் மற்றும் ஆச்சாா்யா்கள் எழுந்தருள தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், செயல் அலுவலர்  உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்துள்ளனர்.

  • Masi magam urchava moorthigal

    காசிக்கு வீசம் பெற்ற திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் மற்றும் ஒதயன் பட்டு காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    சங்கராபரணி ஆற்றங்கரையில் காலை முதலே குவிய தொடங்கிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த முன்னோர்களுக்கு காய்கறிகள் பழங்கள் உள்ளிட்வைகளை கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உற்சவமூர்த்திகள் சங்கராபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தினர்.

    மேலும் மிகவும் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் மற்றும் கங்கைவராக நதீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலித்தனர். மாசி மக தீர்த்தவாரியில் எழுந்தருளிய முருகன் உலகத்தை சுற்றி வருவது போன்று மயில் வாகனத்திலும் விநாயகர் சிவனை சுற்றி வருவது போன்றும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

    மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் கூடியுள்ளதால் திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக உயர் கோபுரங்கள் அமைத்து தொலைநோக்கி வைத்தும், ட்ரோன் கேமிராக்காள் பறக்கவிட்டும் 200 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்கானிப்பு மற்றும் பாதுகாப்பு  பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

  • February 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நலம்
    ரிஷபம்         – பெருமை  
    மிதுனம்     –  புகழ்
    கடகம்         –  தோல்வி  
    சிம்மம்         –   உயர்வு
    கன்னி         –    வெற்றி  
    துலாம்         –     களிப்பு
    விருச்சிகம்     –  இன்பம்
    தனுசு         –     முயற்சி
    மகரம்         –    கவனம்
    கும்பம்         –      அமைதி
    மீனம்         –      பாசம்
    சந்திராஷ்டமம்    –       பூராடம், உத்திராடம்