Author: லிங்கேஷ்

  • Maha shivarathiri vazhipadu

    சிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்றால் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும். மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

    அன்னை அம்பிகைக்கு நவராத்திரி ஒன்பது நாள் கொண்டாட்டம். அப்பன் சிவபெருமானுக்கு ஒரே ராத்திரி அது சிவராத்திரி. கருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் சிவராத்திரியின் மகிமைகளைப் பற்றிப் பலவாறாகக் கூறுகின்றன.

    சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மகா விஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார்.

    பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமையை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.
     

  • Sivalaya ottam

    குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ பக்தர்களின் சிவாலய ஓட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது கோவிந்தா கோபாலா கோஷத்துடன் குமரி கேரளாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரி நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் சிவ பக்தர்களின் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம் அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள முன்சிறை மஹா தேவர் கோவிலில் இருந்து துவங்கும் இந்த ஓட்டம் திக்குறிச்சி திற்பரப்பு, திருநத்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம்,கல்குளம், மேலாங்கோடு திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு , திற்பன்னிக்கோடு உள்ளிட்ட கோவில்களுக்கு சுமார் 108 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி சென்று இறுதியாக 12 வது சிவாலயமான திரு நட்டாலம் பகுதியில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில் முடிவடைகிறது.

    இந்த ஓட்டத்தில் குமரி கேரளாவை சேர்ந்த பல்லாயிரகணக்கான சிவ பக்தர்கள் ஏகாதசி நாளில் தீயில் படாத உணவருந்தி விரதம் இருந்து கோவிந்தா கோபாலா கோஷத்துடன் ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவராத்திரி தினத்தையொட்டி நடைபெறும் இந்த ஓட்டம் குமரி மாவட்டத்தை தவிர வேறெங்கும் நடைபெறாது என்பதால் இந்த ஓட்டம் வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

  • March 07 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – மறதி
    ரிஷபம்         – ஓய்வு
    மிதுனம்     – உயர்வு
    கடகம்         –  நன்மை  
    சிம்மம்         –   கவலை
    கன்னி         –    பக்தி
    துலாம்         –     நிறைவு
    விருச்சிகம்     –  பெருமை
    தனுசு         –     ஆர்வம்   
    மகரம்         –    பயம்
    கும்பம்         –      பகை
    மீனம்         –      வெற்றி
    சந்திராஷ்டமம்    –       மிருகசீருஷம்

     

  • March 7 2024 Subamuhurthanaal

    மார்ச் 7 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – மாசி 24
    சுபமுகூர்த்த நாள்
    07-மார்-2024 வியாழன்
    சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : ஏகாதசி அ.கா 12.23
    நட்சத்திரம் : உத்திராடம் கா 9.49
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிசீ டம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Pachai kali bavani

    தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலய பச்சைக்காளி பவளக்காளி திருவிழா சிறப்பாக நடைபெற்றது ஏராளமானோர் சுவாமி தரிசனம்.

    விஜயாலய சோழனால்  கட்டப்பட்டு சோழர் நாயக்கர் மராட்டியர் போன்ற மன்னர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டதும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களில் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு கோடியம்மன் ஆலயம் தஞ்சாவூரில் எல்லைப் பகுதியில் உள்ளது, இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது,

    மகாவிஷ்ணு அம்சமான பச்சை காளியும் சிவபெருமானின் அம்சமான பவளக்காளியும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி காளியாட்டம் ஆடும் நிகழ்ச்சி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது, அதைப்போல் இந்தாண்டு பச்சைக்காளி பவளக்காளி திருவிழா  காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது,

    காளி அம்மன்களையும் அழைத்து வந்து இரண்டு காளியம்மன் களும் வழங்கிய திருநீர் நிரப்பிய தனித்தனி கபாலங்களை பெற்று பக்தர்களுக்கு தலையில் திருநீறு பூசிவிட்டு இரண்டு காளியம்மன் களையும் ஆசி வழங்க செய்வார்கள்  பச்சைக்காளி அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் இருந்தும் பவளக்காளி அருள்மிகு கொங்கனேஸ்வரர் திருக்கோயில் இருந்தும் புறப்பட்டு நகர்வலம் வந்து வீடு வீடாக சென்று ஆசி வழங்கியது, அதனைத் தொடர்ந்து மேலவீதியில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது இதனை ஏராளமானோர் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • March 06 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – கவலை
    ரிஷபம்         – பரிவு
    மிதுனம்     – கஷ்டம்
    கடகம்         –  ஓய்வு   
    சிம்மம்         –   பாசம்
    கன்னி         –    ஆசை
    துலாம்         –     ஆக்கம்
    விருச்சிகம்     –  தேர்ச்சி
    தனுசு         –     முயற்சி  
    மகரம்         –    உதவி
    கும்பம்         –      துன்பம்   
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –       ரோகிணி, மிருகசீருஷம்

  • Jambukeswarar koil kumbabishegam

    தஞ்சை மாவட்டம் காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி புனித நீர் கலசம் யானை மீது வைக்கப்பட்டு,  தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன் 18 கிராமங்களை சேர்ந்த இரண்டாயிரம் பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் 18 கிராமங்களை உள்ளடக்கிய கிராமங்கள் காசவளநாடு என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள கோவிலூர் என்ற கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் மிகவும் பழமையானதாகும்

    இக்கோவில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. இதனையொட்டி, கோவில் திருப்பணிகள் 18 கிராமங்களை சேர்ந்த மக்களால் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து முடிந்துள்ளது.

    கும்பாபிஷேகம் 7ம் தேதி நடைபெற உள்ளதை ஒட்டி, இன்று யாகசாலை பூஜை துவங்கியது இதனை முன்னிட்டு, கல்லணை கால்வாய் ஆற்றில் இருந்து புனித நீர் கலசம் யானை மீது வைக்கப்பட்டு யாகசாலை மண்டபததிற்கு கொண்டு வரப்பட்டன.

    பெண்கள் கோலாட்டம், கொம்பு இசை, தப்பாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன் 18 கிராமங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பெண்கள் முனைப்பாரி சுமந்து வான வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.

  • March 06 2024 Sarva Egadasi

    மார்ச் 6 – சர்வ ஏகாதசி
    சோபகிருது வருடம் – மாசி 23
    06-மார்-2024 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி அ.கா 2.01
    நட்சத்திரம் : பூராடம் கா 10.53
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிசீ டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Thirupathy Garuda Sevai

    திருப்பதி சமீபத்தில் இருக்கும் சீனிவாச மங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று இரவு கருட வாகன புறப்பாடு  நடைபெற்றது.

     அப்போது திருமாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கல்யாண வெங்கடேஸ்வரருக்கு கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

     கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை இரவு ஆகிய வேலைகளில் சாமி ஊர்வலம் நடைபெறும் நிலையில் ஐந்தாம் நாளான இன்று இரவு கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

     அப்போது திருமாட வீதிகளில் காத்திருந்த கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

  • March 05 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நன்மை
    ரிஷபம்         – முயற்சி
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  ஜெயம்  
    சிம்மம்         –   வரவு
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     மறதி
    விருச்சிகம்     –  தடை
    தனுசு         –     கவலை
    மகரம்         –    சாதனை
    கும்பம்         –      நலம்  
    மீனம்         –      உதவி
    சந்திராஷ்டமம்    –       கார்த்திகை, ரோகிணி