Author: லிங்கேஷ்

  • March 13 2024 Chadurthi Viradham

    மார்ச் 13 – சதுர்த்தி விரதம்
    சோபகிருது வருடம் – மாசி 30
    13-மார்-2024 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : திரிதியை கா 8.53
    நட்சத்திரம் : ரேவதி அ.கா 12.35
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Angala parameswari amman thiruveedhi ula

    ராசிபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவர் திருவீதி உலா பக்தர்கள் சாமி தரிசனம்..

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.   இங்கு மாசி மாத மகா சிவராத்திரி திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    தினந்தோறும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    மேலும் திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ரிஷப வாகனம், யானை வாகனம், கிளி வாகனம், புலி வாகனம், அன்ன வாகனம், காமதேனு  குதிரை வாகனம், மயில்வாகனம் போன்ற பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

    முக்கிய நிகழ்வாக  முத்துக்கள் பதித்த முத்தங்கி அலங்காரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரத வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. அம்மனை வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  • March 12 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – லாபம்
    ரிஷபம்         – ஆதரவு
    மிதுனம்     – பகை  
    கடகம்         –  பயம்
    சிம்மம்         –   முயற்சி  
    கன்னி         –    தோல்வி   
    துலாம்         –     நிறைவு   
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     உதவி
    மகரம்         –    யோகம்
    கும்பம்         –      பகை
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –       ஆயில்யம், மகம்

  • March 12 2024 Indrayanaal

    மார்ச் 12 – மண்டைக்காடு பகவதி அம்மன் ஒடுக்கு பூஜை
    சோபகிருது வருடம் – மாசி 29
    12-மார்-2024 செவ்வாய்
    மண்டைக்காடு பகவதி அம்மன் ஒடுக்கு பூஜை
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : துவிதியை கா 11.01
    நட்சத்திரம் : உத்திரட்டாதி அ.கா 2.06
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • March 11 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – அமைதி
    ரிஷபம்         – புகழ்
    மிதுனம்     – நன்மை
    கடகம்         –  சிரமம்
    சிம்மம்         –   தனம்
    கன்னி         –    ஊக்கம்   
    துலாம்         –     போட்டி  
    விருச்சிகம்     –  வரவு
    தனுசு         –     பாராட்டு
    மகரம்         –    பகை
    கும்பம்         –      களிப்பு
    மீனம்         –      சினம்
    சந்திராஷ்டமம்    –       ஆயில்யம்

  • March 11 2024 Chandra Darisanam

    மார்ச் 11 – சந்திர தரிசனம்
    சோபகிருது வருடம் – மாசி 28
    11-மார்-2024 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : பிரதமை ம 1.17
    நட்சத்திரம் : பூரட்டாதி அ.கா 3.43
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Mariamman koil amavasai sirappu poojai

    ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மாவாசை சிறப்பு பூஜை அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்..

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது திருக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் ஆடி மாதம், அம்மாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய விசேஷ தினங்களும் முழுவதும் அம்மனுக்கு சிறப்பாக பல்வேறு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்

    அதேபோல் மாசி மாதம் அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.  முன்னதாக பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், பன்னீர், மற்றும் சொர்ண அபிஷேகம் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரமான சமயபுரம் மாரியம்மன் சுவாமி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

  • March 10 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – முயற்சி
    ரிஷபம்         – சுகம்
    மிதுனம்     – நட்பு
    கடகம்         –  மறதி
    சிம்மம்         –   சுபம்
    கன்னி         –    ஆய்வு  
    துலாம்         –     ஆர்வம்
    விருச்சிகம்     –  லாபம்
    தனுசு         –     பெருமை
    மகரம்         –    யோகம்
    கும்பம்         –      ஆக்கம்    
    மீனம்         –      ஆசை
    சந்திராஷ்டமம்    –       பூசம்

  • March 10 2023 Amavasai

    மார்ச் 10 – அமாவாசை
    சோபகிருது வருடம் – மாசி 27
    அமாவாசை
    10-மார்-2024 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : அமாவாசை ம 3.39
    நட்சத்திரம் : சதயம் அ.கா 4.50
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Angala parameswari amman mayanakollai

    ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மயானக்கொள்ளை….

    மயிலாடுதுறை அருகே முடிதிருச்சம்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மயானக் கொள்ளை திருவிழா.

    வீதியுலாவாக மயனாத்திற்கு சென்ற சுவாமிக்கு தீபாரதனை எடுத்து கிழங்கு படையலை பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கொள்ளையிடும் மயானக்கொல்லை திருவிழா நடைபெற்றது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து கிழங்கை பெற்று சென்றனர்.
     
    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    கோவில் பரம்பரை அறங்காவலர் பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு விசேஷ சந்தன அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அங்காளம்மன் சுவாமி, வீரபத்திரர் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் மாவிளக்கிட்டு அமபாளுக்கம் வீரபத்திரருக்கும் வேண்டுதலை நிறைவேற்ற மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சுவாமிகள்  (சுடுகாடு) மயானத்தை  அடைந்தது.

    அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டு விரதம் இருந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகளை பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கிழங்கை கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழங்கை கொள்ளையிட்டு பக்தர்களுக்கு வழங்கினர்.

    இந்த கிழங்கை பக்தர்கள் உண்ணுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், நோய்கள் அனைத்தும் தீரும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கிழங்கு வகைகளை எடுத்துச் சென்று ஆலயத்தில் அம்மனை தரிசித்து கிழங்கை உண்டு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.